சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

வர்த்தகப் போரும் செங்கம்பள வரவேற்பும்

வர்த்தகப் போரும் செங்கம்பள வரவேற்பும்
கடந்த காலங்­களில் சீனாவை கடு­மை­யாக விமர்­சித்து வந்த அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், அண்­மையில் அமெ­ரிக்­கா­வுக்கு இரா­ஜாங்க விஜயம் மேற்­கொண்ட சீன ஜனா­தி­பதி ஸீ ஜின்­பிங்­குக்கு அளித்த விமர்­சை­யான வர­வேற்­புகள் உலகின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளன. சீனா தொடர்­பான ட்ரம்ப்பின் நிலைப்­பா­டுகள், கருத்­துகள் எந்­த­ளவு மாற்­ற­ம­டைந்­துள்­ளன என்­ப­தையும் இவ்வரவேற்புகள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன.

வொஷிங்டன் டி. சி நக­ருக்கு அரு­கி­லுள்ள மேரிலண்ட் மாநி­லத்தின் அண்ட்ரூ கூட்­டுப்­படைத் தள விமா­ன­நி­லை­யத்தில், சீன ஜனா­தி­பதி ஸீ ஜின்பிங் தனது பாரியார் பேங் லியுவான் சகிதம் கடந்த  புதன்­கி­ழமை (23) வந்­தி­றங்­கி­ய­போது, அவர் வெள்ளை மாளி­கைக்கு வரும்­வரை ஜனா­தி­பதி ட்ரம்ப் காத்­தி­ருக்­க­வில்லை.

மாறாக, அந்த விமா­ன­நி­லை­யத்­துக்கே நேரில் சென்று சீன ஜனா­தி­ப­தியை வர­வேற்றார் ட்ரம்ப். 1962 ஆம் ஆண்டின் பின்னர் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யொ­ருவர், மற்­றொரு நாட்டின் தலை­வரை விமான நிலை­யத்­துக்கே சென்று வர­வேற்­பது இதுவே முதல் தடவை.

அங்கு சீன ஜனா­தி­ப­திக்கு செங்­கம்­பள வர­வேற்பு அளிக்­கப்­பட்­ட­போது, அமெ­ரிக்­காவின் எவ்.1 ரக குண்­டு­வீச்சு விமா­னங்கள் வானில் பறந்­தன. எவ் 22 இர­கத்தைச் சேர்ந்த 6 விமா­னங்­களும், எவ்16 இர­கத்தைச் சேர்ந்த 6 விமா­னங்­களும் தரையில் வரி­சை­யாக நிறுத்­தப்­பட்­டி­ருந்­தன.

மறு­நாள வெள்ளை மாளி­கையில், சீன ஜனா­தி­பதி தம்­ப­தி­யி­ன­ருக்கு மிக ஆடம்பரமான விருந்­து­ப­சா­ரத்­தையும் நடத்­தினார் ஜனா­தி­பதி ட்ரம்ப்.

சீன ஜனா­தி­பதி ஸீ ஜின்பின், இதற்கு முன் இறு­தி­யாக அமெ­ரிக்­கா­வுக்கு இரா­ஜாங்க விஜயம் மேற்­கொண்­டமை 2015 செப்­டெம்பர் மாதத்­தி­லாகும்.

அப்­போது பராக் ஒபாமா அமெரிக்க ஜனா­தி­ப­தி­யாக விளங்­கினார். 2016 அமெரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி சார்பில் போட்­டி­யிட விரும்­பு­வ­தாக போவ­தாக டொனால்ட் அறி­வித்து 3 மாதங்­க­ளா­கி­யி­ருந்­தன.

அப்­போது ஸீ ஜின்­பிங்­குக்கு ஜனா­தி­பதி பராக் ஒபாமா அளித்த அரச விருந்­து­ப­சாரம் குறித்து,  பிர­சா­ரக்­கூட்­ட­மொன்றில் விமர்­சித்த டொனால்ட் ட்ரம்ப், 'சீனத் தலை­வர்­க­ளுக்கு எதற்­காக அரச விருந்­து­ப­சா­ரங்­களை நடத்­து­கி­றீர்கள்? அவர்­களை மெக்­டொ­னால்ட்ஸுககு கூட்­டிச்­சென்­று­விட்டு, அப்­ப­டியே பேச்­சு­வார்த்தை மேசைக்கு அழைத்துச் செல்­லுங்கள்' என்று கூறி­யி­ருந்தார்.

ஆனால், அதன்பின் மீண்டும் ஸீ ஜின்பிங் அமெ­ரிக்­கா­வுக்கு இரா­ஜங்க விஜயம் மேற்­கொண்­ட­போது, முந்­தைய வர­வேற்­பு­க­ளை­விட பிர­மாண்ட வர­வேற்­புக்கும் ஆடம்­பர விருந்­துக்கும் ஏற்­பாடு செய்­தி­ருந்தார் ட்ரம்ப்.

2015 ஆம் ஆண்டில், தேர்தல் பிர­சா­ரக்­கா­லத்தில், சீனர்கள், அமெ­ரிக்க நிறு­வ­னங்­களை உளவு பார்ப்­ப­தா­கவும், தொழில்­நுட்­பங்­களைத் திரு­டு­வ­தா­கவும் ட்ரம்ப் குற்­றம்­சு­மத்­தி­யி­ருந்தார்.

2017 ஜன­வ­ரியில் டொனால்ட் ட்ரம்ப் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யான பின்னர், அமெ­ரிக்­கா­வுக்கும், சீனா­வுக்கும் இடை­யி­லான இரா­ஜ­தந்­திர, வர்த்­தக உற­வுகள் மோச­ம­டைந்­தன.




கொவிட்19 பரவல் தொடர்­பிலும் சீனாவை ட்ரம்ப் கடு­மை­யாக விமர்­சித்து வந்தார்.

2020 செப்­டெம்­பரில் வெள்ளை மாளி­கையில் செய்­தி­யாளர் மாநா­டொன்றில் ட்ரம்ப் பேசு­கையில், 'வேறு எந்த நாடும் சீனா போன்று எம்மை ஏமாற்­ற­வில்லை. சீனா­வு­ட­னான கொடுக்கல் வாங்­கல்­களால் பில்­லியன் கணக்­கான டொலர்­களை நாம் இழக்­கிறோம். அவர்கள் அந்த பணத்தை எடுத்து தமது இரா­ணு­வத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­கி­றார்கள்' என விமர்­சித்தார். அவ்­வ­ருட அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜோ பைட­னிடம் ட்ரம்ப் தோல்­வி­யுற்றார்.


2025 ஜன­வ­ரியில் இரண்­டா­வது தட­வை­யாக அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யான ட்ரம்ப், சில மாதங்­க­ளி­லேயே உலகின் பல்­வேறு நாடு­க­ளுக்கு எதி­ராக புதிய இறக்­கு­மதி வரி­களை அறி­வித்தார். சீனா­வுக்கு எதி­ரான ட்ரம்ப் நிர்­வா­கத்தின் 'வர்த்­தகப் போர்' தீவி­ர­ம­டைந்­தது, அமெ­ரிக்­கா­வுக்குப் போட்­டி­யாக, சீனாவும் அமெ­ரிக்கப் பொருட்­க­ளுக்­கான வரி­களை அதி­க­ரித்து சவால்­விட்­டது.


ஆனால், இம்­முறை அமெ­ரிக்­கா­வுக்குச் சென்ற சீன ஜனா­தி­பதி ஸீ ஜின்­பிங்கு வெள்ளை மாளி­கை­யிலும் ஆடம்­பர விருந்­து­ப­சாரம் அளித்தார் ட்ரம்ப். கடந்த வருடம் ஈரா­னிய அணு­சக்தி நிலை­யங்கள் மீது குண்­டு­வீ­சு­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட பீ2 இரக குண்­டு­வீச்சு விமானம் உட்­பட அமெ­ரிக்க போர் விமா­னங்கள், ஸீ ஜின்­பிங்கை ட்ரம்ப வர­வேற்­பின்­போது வான்­வழி அணி­வ­குப்பை நடத்­தின.

இந்­நி­கழ்வில் ஸீ ஜின்பிங் புகழ்ந்து தள்­ளினார் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்.  ஸீ ஜின்­பிங்கை சிறந்த கனவான், மிகச் சிறந்த நண்பன் என்­றெல்லாம் புகழ்ந்த ட்ரம்ப், சீனாவை மிகச் சிறந்த வர்த்தப் பங்­காளர் என வர்­ணித்தார்.  

'ஜனா­தி­பதி ஸீ ஜின்­பிங்கும்  நானும் நமது இரு நாடு­களும் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களில் மிகப்­பெ­ரிய முன்­னேற்­றங்­களை அடைந்­துள்ளோம்' என ட்ரம்ப் கூறினார்.

வெள்ளை மாளி­கையில் செய்தி சேக­ரிப்­ப­தற்கு சி.என்.என். உட்­பட 3 அமெ­ரிக்க ஊட­கங்­க­ளுக்கு தடை விதித்­தி­ருந்த டொனால்ட் ட்ரம்ப், ஸீ ஜின்­பிங்கின் வெள்ளை மாளிகை விஜ­யத்­தின்­போது, சீன ஊட­க­வி­ய­லா­ளர்­களை, மிகச் சிநே­க­பூர்­வ­மான ஊட­க­வி­ய­லா­ளர்கள் எனப் புகழ்ந்தார்.

இந்நிகழ்வில் ட்ரம்பின் கருத்­துக்கள் மிகவும் இணக்­க­மான தொனியை வெளிப்­ப­டுத்­தின. இது சீனத் தலை­வரை தன்­வ­சப்­ப­டுத்தும் அமெ­ரிக்க அதி­பரின் நீண்­ட­கால முயற்­சி­களை கோடிட்டுக் காட்­டு­வ­தாக இருந்­தது என விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது

எவ்­வா­றெ­னினும், பெய்­ஜிங்கும் வொஷிங்­டனும் தங்­க­ளது வல்­ல­ரசுப் போட்­டியை அமை­தி­யான முறையில் கையாள வேண்டும் என ஜனா­தி­பதி ட்ரம்­பிடம் சீன ஜனா­தி­பதி ஸீ ஜின்பிங், தெரி­வித்தார்.

அதே வேளையில், செயற்கை நுண்­ண­றிவு, தாய்வான், மற்றும் ஈரான் போர் ஆகிய விவ­கா­ரங்­களில் சீனாவின் நிலைப்­பா­டு­களை தெளி­வு­ப­டுத்த இந்தப் பய­ணத்தை ஸீ ஜின்பிங் பயன்­ப­டுத்திக் கொண்டார்.

இரு நாடு­க­ளுக்கும் இடையே எந்­த­வொரு மோதலும் இல்லை என்­பதை இரு நாடு­களும் உறுதி செய்­து­கொள்ள வேண்டும் எனவும் ஜின்பிங் கூறினார்.

மேலும், செயற்கை நுண்­ண­றிவு மனி­த­கு­லத்­திற்கு அச்­சு­றுத்­த­லாக இருக்கும் என்ற எச்­ச­ரிக்­கை­களை ட்ரம்ப் தொடர்ந்து நிரா­க­ரித்து வரும் நிலையில்,  செயற்கை நுண்­ண­றிவின் வளர்ச்சி 'எப்­போதும் மனி­தனின் கட்­டுப்­பாட்டில் இருக்க வேண்டும்' என்றும் ஜின்பிங் எச்­ச­ரித்தார்.

ஆனால், பின்னர் வெள்ளை மாளி­கையின் ஓவல் அலு­வ­ல­கத்தில் அவர்கள் சந்­தித்­த­போது, தாய்­வானின் சுதந்­தி­ரத்தை எதிர்ப்­ப­தோடு, 'முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன்' செயல்­ப­டு­மாறு ட்ரம்பை ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்

ஈரான் போரை பேச்சுவார்த்தை மூலம் முடிந்தவரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருமாறும் டிரம்பைக் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்காவும் சீனாவும் நவம்பர் 10 ஆம் திகதி முடிவடையவிருந்த, 'வர்த்தகப் போர் நிறுத்தத்தை' மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

இது தவிர, ஸீ ஜின்பிங்கின் அமெரிக்க விஜயத்தின் போது சில திருப்புமுனைகள், எதிர்பார்க்கப்பட்டன. ஆனால், இந்தப் பயணம் அதிகமாக ஒரு காட்சிப்பூர்வமான நிகழ்வாகவே அமைந்தது என விமர்சிக்கப்படுகிறது.


ஆர்.சேதுராமன்
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்