சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

யாழில். கள்ள மண் ஏற்றிய டிப்பர்கள் மீது துப்பாக்கி சூடு – இருவர் கைது

யாழில். கள்ள மண் ஏற்றிய டிப்பர்கள் மீது துப்பாக்கி சூடு – இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் மீது காவற்துறை விசேட அதிரடிப்படையினர் (STF) துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, வாகனங்களை மடக்கிப் பிடித்ததுடன் அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.

மீசாலை வடக்கு – புத்தூர் வீதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவற்துறை விசேட அதிரடிப்படையினர், குறித்த வீதியால் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.

 


அதிரடிப்படையினரின் கட்டளையை மீறி, டிப்பர் வாகனங்களின் சாரதிகள் வாகனங்களை நிறுத்தாது வேகமாகச் செலுத்தித் தப்பிச் செல்ல முற்பட்டனர்.இதனையடுத்துத் துரிதமாகச் செயற்பட்ட அதிரடிப்படையினர், தப்பியோட முயன்ற வாகனங்களின் டயர்களை (Tires) இலக்கு வைத்துத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

 துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி டயர்கள் சேதமடைந்ததால் வாகனங்களை மேற்கொண்டு செலுத்த முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து சாரதிகள் வாகனங்களை விட்டு இறங்கித் தப்பியோட முயன்ற வேளையில், அதிரடிப்படையினர் அவர்களைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சாரதிகளும், சட்டவிரோத மணலுடன் கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கொடிகாமம் காவல் நிலையத்தில்  ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 


பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்