சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகே விபத்து : பொலிஸ் உத்தியோகத்தர் பலி!

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகே விபத்து : பொலிஸ் உத்தியோகத்தர் பலி!
பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  மன்னாரைச் சேர்ந்த  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அவர் கடமையின் நிமித்தம் இன்று (29) செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரி பொலிஸ் நிலையம் நோக்கி பயணித்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மதகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.   மன்னார் அடம்பன் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார்.

விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்