சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

அமெரிக்காவுக்கு எதிராக சிலந்தி வலை வியூகத்தை எடுத்த ஈரான்..!! ஆடிப்போன டிரம்ப்..!!

அமெரிக்காவுக்கு எதிராக சிலந்தி வலை வியூகத்தை எடுத்த ஈரான்..!! ஆடிப்போன டிரம்ப்..!!
அமெரிக்காவுக்கு எதிராக சிலந்தி வலை வியூகத்தை எடுத்த ஈரான்..!! ஆடிப்போன டிரம்ப்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரில் அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் புது வியூகம் வகுத்துள்ளது. இதனை சிலந்தி வலை (Spider Web) வியூகம் என அழைக்கின்றனர். அண்மை காலமாக போர்களில் மிகவும் பிரபலமானதாக இந்த சிலந்தி வலை தாக்குதல்கள் மாறிவருகின்றன

அண்மையில் அமெரிக்க ராணுவம், பிரிட்டனில் உள்ள RAF Fairford விமான படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து B-1 ரக போர் விமானங்களை அவசர அவசரமாக வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்தது. இந்த விமான தளத்தில் நிறுத்திப்பட்டிருந்த போர் விமானங்களையும், அங்குள்ள அமெரிக்க வீரர்களையும் குறிவைத்து அதிநவீன ட்ரோன் தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டது உளவு துறை மூலம் தெரியவந்ததால் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்திய Operation Spiderweb உத்தியை பின்பற்றியே ஈரான் இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இதன் படி சிறிய ரக ட்ரோன்கள் ரகசியமாக நாட்டின் உட்பகுதிக்கு கடத்தப்படும். ராணுவ விமான தளங்களுக்கு அருகில் இருந்து திடீரென இவற்றை இயக்கி முக்கியமான போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை பெருமளவில் சேதப்படுத்துவார்கள். 

சிலந்தி வலை அமைப்பை போல இந்த டிரோன்கள் குறிப்பிட்ட இலக்கை நோக்கி தாக்குதல் நடத்தும். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. 

இந்த போரில் மிகவும் வலிமையுடன் இருக்கும் ரஷ்யாவை நிலைகுலைய வைக்க உக்ரைன் சிலந்தி வலை டிரோன் தாக்குதலை தான் பயன்படுத்தியது. முதலில் ரஷ்யாவுக்கே தெரியமல் லாரிகள் மூலம் ரகசியமாக டிரோன்களை அனுப்பி அவற்றை ராணுவ தளங்கள் குறிப்பாக குண்டு வீச்சு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களில் நிலை நிறுத்தியது.

இதன் பின்னர் உக்ரைனில் இருந்தபடியே ஒரே நேரத்தில் இந்த டிரோன்களை இயக்கி போர் விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் குண்டு வீச்சு விமானங்கள் பலத்த சேதமடைந்து உடனடியாக இயக்க முடியாத நிலைக்கு சென்றன.

 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் உக்ரைன் ராணுவம் நடத்திய இந்த தாக்குதல் ரஷ்யாவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதே பாணியை பின்பற்றி ஈரான் அமெரிக்க போர் விமானங்களை சேதமடைய திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது. 

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படை இந்த திட்டத்தின் பின்னணியில் இருப்பதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க விமான படைகளின் விமானிகளையும், வீரர்களையும் கொல்வதே இதன் முக்கிய நோக்கம் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டன் காவல்துறையினர் இது தொடர்பாக விமான தளத்திற்கு அருகில் பலரை கைது செய்துள்ளது. பிரிட்டன் பிரதமர் ஆன்டி பர்ஹாம் இந்த சதி திட்டத்தில் ஈரானின் நேரடி தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஈரான் தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.


பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்