சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தத் திட்டம்.. போர் விமானத்தை அனுப்பிய இஸ்ரேல்.. நடந்தது என்ன?

பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தத் திட்டம்.. போர் விமானத்தை அனுப்பிய இஸ்ரேல்.. நடந்தது என்ன?
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் Flydubai விமானம் ஜோர்டான் வான்வெளி பகுதியில் பறந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் இருந்து அவசரநிலை சிக்னல் அனுப்பப்பட்டுள்ளது.

அதோடு சுமார் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் மிகக் குறுகிய நேரத்தில் சுமார் 14,000 அடி வரை திடீரென கீழே இறங்கியுள்ளது. இதனால் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்ட நிலையில், விமானம் அவசர அவசரமாக சவூதி அரேபியாவின் Tabuk விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.


அதன் பின்னர், இந்த விமானத்தின் துணை விமானி விமானத்தைப் பயணிகளுடன் சேர்த்து தரையில் மோதி வெடிக்க செய்யும் நோக்கத்துடன் சக விமானியை தாக்கியதும், பின்னர் விமானத்தில் இருந்த துணிச்சலான பயணிகள் இந்த சதித் திட்டத்தை தடுத்து நிறுத்திய அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகின.

இந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக இந்த பயணிகள் விமானத்தைச் சுற்றுவீழ்த்த இஸ்ரேல் போர் விமானங்களை அனுப்பிய சம்பவமும் வெளிவந்துள்ளது. 

இதுகுறித்து இஸ்ரேலின் முன்னணி ஊடகமான Jerusalem Post வெளியிட்டுள்ள செய்தியில், Flydubai விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, இஸ்ரேல் வான் எல்லை அருகே விமானம் வழக்கத்திற்கு மாறாக, வேகமாக கீழே இறங்கியதும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் இதனை ஒரு பயங்கரவாத சம்பவமாகக் கருதினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


மேலும் இஸ்ரேலிய வான்படை உடனடியாகத் தங்களின் போர் விமானங்களை அந்த விமானத்தை நோக்கி அனுப்பியதாகவும், அந்தப் போர் விமானங்களுக்குப் பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தும் அதிகாரமும் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

எனினும், Flydubai விமானம் கட்டுப்பாட்டுக்குள் வந்து தனது பாதையை சவூதியை நோக்கி மாற்றியதால் இஸ்ரேலிய போர் விமானங்கள் திரும்பி வந்ததாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் அந்தப் பயணிகள் விமானம் கட்டுப்பாட்டுக்குள் வராமல் இருந்திருந்தால் இஸ்ரேலிய போர் விமானங்கள் அதனை தாக்கி அழிந்திருக்கும் நிலை உருவாகி, பல பேர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்