சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

திருகோணமலையில் மதுபானக் கடையில் கொள்ளை முயற்சி: பொலிஸ் அதிகாரி மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது!

திருகோணமலையில் மதுபானக் கடையில் கொள்ளை முயற்சி: பொலிஸ் அதிகாரி மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது!
திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை முயற்சியை அதன் ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (18) இரவு 9:45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள், பணத்தைத் திருடித் தப்பிச் செல்ல முயன்றபோதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஊழியர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது, பணப் பையுடன் கொள்ளையன் ஒருவனை ஊழியர்கள் பிடிக்க முயன்றனர்.

இதன்போது மற்றைய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதிலும் இலக்கு தவறியதை அடுத்து, இருவரும் மோட்டார் சைக்கிளில் அநுராதபுரம் வீதி வழியாகத் தப்பிச் சென்றனர்.

சம்பவம் தொடர்பில் உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், திடீர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து மிகிந்துபுர பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இரு சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.

கைதான இருவரும் உப்பூவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரும், சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவரும் எனத் தெரியவந்துள்ளதுடன், இவர்கள் சம்பவத்தின் போது மதுபோதையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும்,இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்