சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

தங்க மங்கை வித்யா ராம்ராஜ் கௌரவம்: 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்

தங்க மங்கை வித்யா ராம்ராஜ் கௌரவம்: 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்
2026 ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளைக் கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பாக பாராட்டு மற்றும் ஊக்கத்தொகையானது முதல்வர் சார்பாக வழங்கப்பட்டது

தமிழக அரசு சார்பாக பாராட்டு விழா

நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 

இந்த போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழாவானது தமிழ்நாடு அரசு சார்பாக நடத்தப்பட்டது .வரலாற்றில் முதன்முறையாக ரூ.1000 கோடிக்கும் மேல் விளையாட்டு துறைக்கு நிதி ஒதுக்கியவர் முதலமைச்சர் விஜய். 

மூன்றாம் பாலினத்தவருக்கு மாநில அளவில் போட்டிகளை உருவாக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் கனவு .ஆசிய விளையாட்டு போட்டிகள், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர் வீராங்கனைகளுக்கான பாராட்டு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

ஊக்கத்தொகை வழங்கி கெளரவிப்பு

ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் தடகளத்​தில் தமிழகத்​தின் கோவை மாவட்​டம் மீனாட்​சிபுரத்தை சேர்ந்த வித்யா ராம்​ராஜ் 4X400 மீட்​டர் தொடர் ஓட்​டத்​தில் தங்​கப் பதக்​க​மும், 4X400 மீட்​டர் கலப்பு தொடர் ஓட்​டத்​தில் வெள்​ளிப் பதக்க​மும், 400 மீட்​டர் தடை தாண்​டும் ஓட்​டத்​தில் வெண்​கலப் பதக்​கமும் வென்று சாதனை படைத்​தார்.

இதில் 400 மீட்​டர் தடை தாண்​டும் ஓட்​டத்​தில் இலக்கை 54.75 விநாடிகளில் கடந்து பி.டி.உஷா​வின் 42 வருட தேசிய சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்து இந்​தி​யா​வின் தங்க மங்​கை​யாக உரு​வெடுத்​த வித்யா ராம்ராஜுக்கு, 1 கோடியே 55 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தார் முதல்வர்.

இது குறித்து பேசிய வித்யா ராம்ராஜ்

எந்தவொரு ஆதரவும் இல்லாமல் இவ்வளவு பெரிய மேடைக்கு வந்திருக்க முடியாது. அதற்கு நான் என்னுடைய நன்றியை தமிழ்நாடு அரசிற்கும், என்னுடைய கோச் நெஹ்பால் சிங் அவர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்,நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், 

இங்கு நிறைய இளம் தலைமுறையினர் உள்ளீர்கள், இங்கு நமக்கு உதவி செய்ய நிறைய பேர் உள்ளார்கள். நம்ம நம்மளோட 100% உழைப்பை அளித்தால் போதும் ,இங்கு 101% சப்போர்ட் பண்ண தயாரா இருக்காங்க எனவே நம்மளுடைய தொடர் முயற்சிகளை மட்டும் நம்பிக்கையோடு தர வேணடும் கேட்டுகொண்டார்.

பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்