சமீபத்திய பதிவுகள்
பிரிட்டன் வனவிலங்கு பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்: கூண்டுக்குள் குதித்த நபரை கடித்துக் கொன்ற புலி..- வீடியோ  •  மெக்கா, மதீனாவை தவிர சவுதியில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் குறி - ஹவுதிக்கள் எச்சரிக்கை  •  இறுதிப் போரில் விடு­தலைப் புலிகளின் விமானபடைக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கிய இந்­திய விமா­னப்­படை!!!!  •  சுற்­றி­வ­ளைக்­கப்­பட்ட ராஜபக்‌ஷ குடும்பம்  •  அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சித்தப்பாவுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சித்தப்பாவுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு
மட்டக்களப்பில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறுமியின் சித்தப்பா உறவுடைய நபருக்கு (வயது 35) 12 ஆண்டுகால சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, குறித்த நபர் செய்த இரண்டு குற்றங்களுக்காக 12 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் கடந்த வெள்ளிக்கிழமை (18) தீர்ப்பினை அறிவித்தார்.

2019 மே 19ஆம் திகதி அச்சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவருக்கு எதிராக தண்டனைச் சட்டகோவை 354இன் கீழ் சிறுமியை கடத்திச் சென்றமை மற்றும் தண்டனை சட்டக்கோவை 364இன் கீழ் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை ஆகிய இரு குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து அவ்வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில், கைதான  நபர் குற்றவாளி என 24.08.2026 அன்று நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

அதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இவ்வழக்குக்கான தீர்ப்பினை நீதிபதி அறிவித்தார்.
பகிரவும்:

கருத்துக்கள் (0)

இதுவரை கருத்துக்கள் இல்லை.

தொடர்புடைய செய்திகள்